ICC

Advertisment

டெஸ்ட் போட்டிகளுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. அணிகளுக்கான பட்டியலில் 360 புள்ளிகளுடன் இந்திய அணி முதல் இடத்தில் தொடர்கிறது. இரண்டாவது, மூன்றாவது, நான்காவது இடங்களில் முறையே ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடம் பெற்றுள்ளன.

பேட்ஸ்மேனுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதலிடத்திலும், விராட் கோலி 886 புள்ளிகளுடன் 2ம் இடத்திலும் உள்ளார். பந்து வீச்சாளர்களுக்கான தரவரிசையில் ஆஸ்திரேலியா வீரர் பேட் கம்மின்ஸ் 904 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ஸ்டுவர்ட் பிராட் 846 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளார். இதில் எட்டாம் இடத்தில் இருந்த இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா ஒரு இடம் சரிந்து 9ம் இடத்தைப் பெற்றுள்ளார்.

ஆல்ரவுண்டருக்கான தரவரிசைபட்டியலில் இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் 454 புள்ளிகளுடன் முதல் இடத்திலுள்ளார். இந்தப் பட்டியலில் இந்திய வீரர் ஜடேஜா 397 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், அஷ்வின் 281 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளனர்.