ICC Dream Team; 3 Indian players selected

Advertisment

8 ஆவது உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவில் நடந்து முடிந்தது. இதில், இந்திய அணி அரையிறுதி போட்டியில் இங்கிலாந்துடன் விளையாடி தோல்வி அடைந்ததால் இறுதிப் போட்டிக்குத்தகுதி பெறாமல் வெளியேறியது. வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுடன் விளையாடி வெற்றி பெற்றது.

இந்நிலையில் 11 வீரர்கள் அடங்கிய கனவு அணியை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய அணி சார்பில் 3 வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஐசிசி கனவு அணியின் தொடக்க ஆட்டக்காரராக இங்கிலாந்து அணியின் அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் ஜாஸ் பட்லர் இடம் பெற்றுள்ளனர். இதன் பின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களாக இந்திய அணியின் விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், நியூசிலாந்து அணியைச் சேர்ந்த க்ளென் பிலிப்ஸ், ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா, பாகிஸ்தான் அணியைச் சேர்ந்த சதாப் கான் போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.

பந்து வீச்சில் இங்கிலாந்து அணியின் சாம்கர்ரன், தென் ஆப்பிரிக்க அணியின் நோர்ட்ஜெ, இங்கிலாந்து அணியின் மார்க்வுட் மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த அஃப்ரிடி போன்றோர் இடம் பெற்றுள்ளனர்.12 ஆவது வீரராக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இடம் பெற்றுள்ளார்.

Advertisment

ஐசிசி கனவு அணி : அலெக்ஸ் ஹேல்ஸ், ஜாஸ் பட்லர், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், க்ளென் பிலிப்ஸ், சிக்கந்தர் ராசா, சதாப் கான், சாம்கர்ரன், நோர்ட்ஜெ, மார்க்வுட், அஃப்ரிடி. 12 ஆவது வீரர் ஹர்திக் பாண்டியா. இந்த அணியின் கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பராக ஜாஸ் பட்லர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.