ADVERTISEMENT

2018 ஆம் ஆண்டுக்கான ஐசிசி விருதுகள் அறிவிப்பு; விருதுகளை வாரி குவித்து வரலாறு படைத்த கோலி...

01:13 PM Jan 22, 2019 | kirubahar

ADVERTISEMENT

ADVERTISEMENT

ஆண்டுதோறும் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கான விருதினை, அவர்களது செயல்பாட்டின் அடிப்படையில் ஐசிசி வழங்கி வருகிறது. அந்த வகையில் 2018 ஆம் ஆண்டுக்கான விருது பட்டியல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருது பட்டியலில் ஒருநாள் போட்டிகளில் சிறந்த வீரர், டெஸ்ட் போட்டிகளில் சிறந்த வீரர், அனைத்து பிரிவுகளையும் சேர்த்து ஒட்டுமொத்தமாக இந்த ஆண்டிற்கான சிறந்த கிரிக்கெட் வீரர் என அனைத்து முக்கிய விருதுகளையும் இந்திய கேப்டன் கோலியே வென்றுள்ளார். சிறந்த இளம் வீரர் என்ற விருதை இந்திய வீரரான ரிஷப் பந்த் பெற்றுள்ளார். மேலும் 'ஸ்பிரிட் ஆஃப் கிரிக்கெட்' என்று விருதினை நியூஸிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் பெற்றுள்ளார். இதுவரையிலான ஐசிசி கிரிக்கெட் விருதுகள் வரலாற்றில் சிறந்த கிரிக்கெட் வீரர், சிறந்த ஒருநாள் வீரர், சிறந்த டெஸ்ட் வீரர் என அனைத்து விருதுகளையும் ஒன்றாக பெற்ற முதல் வீரர் என்ற பெருமையை கோலி பெற்றுள்ளார்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT