VIRAT - WILLAIMSON

Advertisment

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்தும் மோத உள்ளன. வரும் 18 ஆம் தேதி இந்த இறுதிப் போட்டி தொடங்கவுள்ளது. இந்நிலையில் இந்த போட்டிக்கான பரிசுத்தொகை குறித்து சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெல்லும் அணிக்கு, டெஸ்ட் மேஸோடு (Championship Mace) 1.6 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படும் என சர்வதேச கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. போட்டியில் தோற்பவருக்கு 8 லட்சம் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படும் எனவும் சர்வதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

ஒருவேளை இறுதிப் போட்டி சமனில் முடிந்தாலோ, டை ஆனாலோ வெல்பவருக்கும், தோல்வியடைபவருக்கும் வழங்கப்பட வேண்டிய பரிசுத்தொகை இரண்டு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும் எனவும், டெஸ்ட் மேஸை இரண்டு அணிகளும் பகிர்ந்துகொள்ளும் எனவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது.