india vs pakistan

சர்வதேச கிரிக்கெட் வாரியம், 2022ஆம் ஆண்டு இருபது ஓவர் உலக கோப்பைக்கான அட்டவணையை இன்று வெளியிட்டுள்ளது. அதன்படி 2022ஆம் ஆண்டின் டி20 உலக கோப்பை போட்டிகள், ஆஸ்திரேலியாவில் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்குகிறது.

Advertisment

இந்தத் தொடரில், சூப்பர் 12 சுற்றின் குரூப் 2 பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி அக்டோபர் 23ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதனைத்தொடர்ந்து அக்டோபர் 27 ஆம் தேதி, முதல் சுற்றில் குரூப் ஏ பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்த அணியைஇந்தியா எதிர்கொள்ளவுள்ளது.

Advertisment

தொடர்ந்து அக்டோபர் 30ஆம் தேதி தென்னாப்பிரிக்காவையும், நவம்பர் 2ஆம் தேதி வங்கதேசத்தையும், நவம்பர் 6ஆம் தேதி முதல் சுற்றில் குரூப் பி பிரிவில் முதல் இடத்தைப் பிடித்த அணியையும் இந்தியா எதிர்கொள்ளவுள்ளது.