ஜப்பானின் டோக்கியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் பதக்கம் வென்று சாதனை படைத்தார் இந்திய வீராங்கனை பி.வி சிந்து. ஏற்கனவே ரியோ ஒலிம்பிக்கில் வெள்ளி வென்றிருந்த பி.வி.சிந்து, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றதால் ஒலிம்பிக்கில் தனிநபர் பிரிவில் 2 பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற வரலாற்றையும் சிந்து நிகழ்த்தினார்.
இந்நிலையில் இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்த பி.வி.சிந்து, விரைவில் பயிற்சி மையம் ஒன்றை தொடங்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர், "விசாகப்பட்டினத்தில், அரசின் உதவியோடு விரைவில் இளைஞர்களுக்கான பயிற்சி மையம் ஒன்றை தொடங்குவேன். சரியான ஊக்குவிப்பு இல்லாததால் பல இளைஞர்கள் விளையாட்டில் பின்தங்கியுள்ளனர்" எனத் தெரிவித்துள்ளார்.