Advertisment

ஒரு தந்தையாக ஜிவா என்னை நிறையவே மாற்றிவிட்டார்! - தோனி பெருமிதம்

சமீபத்தில் நடந்துமுடிந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் வெற்றிக்கோப்பையை பெற்ற சென்னை அணி வீரர்கள் உற்சாகக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். ஆனால், அந்த அணியின் கேப்டன் தோனி தன் மகள் ஜிவாவுடன் கொஞ்சி விளையாடிக் கொண்டிருந்தார். அப்பாக்களின் அணி என செல்லமாக அழைக்கப்பட்ட சென்னை அணியின் வீரர்கள், தங்கள் பிள்ளைகளையும் உடன் அழைத்து வந்திருந்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

Advertisment

ziva

மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின்போது தோனி - சாக்‌ஷி ஜோடிக்கு பெண்குழந்தை பிறந்தது. ஆனால், நாட்டுக்கான வேலையில் இருப்பதால் முடிந்ததும் சென்று பார்ப்பேன் என்று தோனி உருக்கமாக பேசினார். இந்திய அணியின் வெற்றிகரமான கேப்டனாக இருந்த தோனி, ஒரு நல்ல அப்பாவாக இருக்கவும் முயற்சிப்பதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தனது மகள் ஜிவா குறித்து பேசிய தோனி, ‘ஒரு கிரிக்கெட் வீரராக எனக்குள் ஏதேனும் மாற்றங்கள் நிகழ்ந்திருக்கிறதா என்று கேட்டால் தெரியாது. ஆனால், ஒரு சாதாரண மனிதனாகவும், தந்தையாகவும் எனக்குள் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. பெண் குழந்தைகள் என்றாலே தந்தையுடன் நெருக்கமாக இருப்பது இயல்புதான். மூன்று வருடங்களுக்கு முன்னர் இருந்த தந்தையாக நான் இல்லை. நான் வந்தால்தான் சாப்பிடுவேன் என்று ஜிவா அடம்பிடிக்கத் தொடங்கியிருக்கிறாள். அவளது மிகப்பெரிய கோரிக்கையான மைதானத்திற்கு அழைத்துச் செல்வதை நான் சமீபத்தில் நிறைவேற்றினேன். அதன்பின், மற்ற வீரர்களும் தங்கள் குழந்தைகளை மைதானத்திற்கு கூட்டி வந்தனர்’ என தெரிவித்துள்ளார்.

indian cricket MS Dhoni sports ziva
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe