ஆசியா கோப்பையின் சூப்பர் 4 சுற்றின் இரண்டாம் ஆட்டம் நேற்று நடைபெற்றது. இந்திய பாகிஸ்தான் அணிகள் மோதிய இந்த போட்டியில் முதலில் ஆடிய இந்தியா 181 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் விளையாடிய பாகிஸ்தான் கடைசி ஒவரில் வெற்றி பெற்றது. பரபரப்பான இந்த போட்டியில் விராட் கோலி 60 ரன்கள் எடுத்தார்.
போட்டி முடிந்து பேட்டி அளித்த விராட் கோலி, டெஸ்ட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து நான் விலகிய போது தோனி மட்டுமே எனக்கு மெசேஜ் செய்தார் என்று கூறிய கோலி தனது செல்போன் எண் பலரிடம் இருப்பதாகவும் தோனியை தவிர வேறு யாரும் எனக்கு மெசேஜ் செய்யவில்லை என்றும் கூறி அந்த நிகழ்வை நினைவு கூர்ந்தார். தோனியால் நான் எப்போதும் பாதுகாப்பின்மையை உணர்ந்ததில்லை என்றும் அவரும் அதுபோல் நினைத்ததில்லை என்றும் கூறியுள்ளார்.