Advertisment

“நான் சொல்லல.. நீங்க தான் சொல்றீங்க..” - தோனி பதிலால் ரசிகர்கள் உற்சாகம்

publive-image

16வது ஐ.பி.எல். டி.20 கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றது. இந்த ஐ.பி.எல். தொடரில் 10 அணிகள் மோதுகின்றன. தற்போது வரை நடந்துள்ள ஐ.பி.எல். போட்டியில் குஜராத் அணி 12 புள்ளிகளுடன் முதலிடத்திலும், லக்னோ அணி 11 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், அதே 11 புள்ளிகளுடன் சென்னை அணி மூன்றாவது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ் 10 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

Advertisment

நேற்று லக்னோ - சென்னை அணிகளுக்கான ஆட்டம் நடைபெற்றது. இந்த ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டு இரண்டு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டது. இந்த ஆட்டத்தின் துவக்கத்தில் டாஸ் போட்ட பிறகு வர்ணனையாளர் டானி மாரிசன்தோனியிடம், “உங்களது இறுதி ஐ.பி.எல். சீசனில் ரசிகர்கள் அளிக்கும் ஆதரவு மகிழ்ச்சியைதருகிறதா?” எனக் கேள்வி எழுப்பினார்.

Advertisment

அதற்கு பதில் அளித்த தோனி, “நீங்கள் தான் இது எனது இறுதி ஐ.பி.எல். சீசன் என முடிவெடுத்துப் பேசுகிறீர்கள். ஆனால், நான் அப்படி எதுவும் முடிவெடுக்கவில்லை” என்று சொல்லிவிட்டு சிரித்தார். தோனியின் இந்தப் பதிலை கேட்டு ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். அதேபோல், தற்போது சமூக வலைதளங்களில் தோனியின் ரசிகர்கள், அவர் அளித்த அந்தப் பேட்டியின் காணொளியை உற்சாகமாகப் பரப்பி வருகின்றனர்.

கடந்த மாதம் 21ம் தேதி நடந்த சென்னை - ஐதராபாத் இடையேயான 29வது லீக் போட்டியில் சென்னை வென்ற பிறகு பேசிய தோனி, “என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் இருக்கிறேன். இந்த தருணத்தை மகிழ்ச்சியாக அனுபவித்து விளையாடுவதே முக்கியம். சென்னையில் விளையாடுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சென்னை ரசிகர்கள் எனக்கு அதிகமான அன்பை கொடுத்திருக்கிறார்கள். இப்போதும் கூட பாருங்கள் நான் பேசுவதை கேட்க நீண்ட நேரம் காத்திருக்கிறார்கள்” என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

CSK IPL
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe