publive-image

விராட் கோலி தனது 71 ஆவது சதத்தை 70 ஆவது சதம் அடித்து கிட்டத்தட்ட 1021 தினங்கள் கடந்த பின்பே அடித்தார். ஆசியக் கோப்பையில் சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அவர் இச்சாதனையை செய்தார்.

Advertisment

இந்நிலையில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய let there be Sport எனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய விராட்தனது 71 ஆவது சதம் குறித்து மனம் திறந்தார். அப்போது பேசிய அவர், “நான் சதத்தினை எட்டுவதற்கு முந்தைய பந்து, ‘நான் இப்போது 94 ரன்னில் இருக்கிறேன்.ஒரு வேளை சதமடிக்கலாம்’ என நினைத்தேன். அடுத்த பந்தே சிக்ஸருக்கு சென்றது. ஆனால் 100 ரன்களை அடித்ததும் நான் அதிகமாக சிரித்தேன். ‘இதைத் தானா 2 வருடங்களாக தேடிக் கொண்டிருந்தேன்’ என்பன போன்ற மனநிலையில் இருந்தேன்.

Advertisment

சதமடித்த கணம் நிகழ்ந்ததும் வேகமாக கடந்து சென்றது. மறுநாள் மீண்டும் உதயமானது. அந்த கணம் என்றென்றும் இருக்கப் போவதில்லை” என்றார். தொடர்ந்து தொகுப்பாளர், சதமடித்த பின் அழுதீர்களா எனக் கேள்வி கேட்டார். அதற்கு பதில் அளித்த விராட் கோலி, “சதமடித்த நேரத்தில் அழவில்லை. அனுஷ்கா சர்மாவுடன் பேசும்போது அழுததாக தெரிவித்தார்.