Advertisment

நான் வந்துட்டேன்னு சொல்லு! - ஹர்பஜன் சிங்கின் மெர்சல் ட்வீட்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 11ஆவது சீசன் அடுத்த மாதம் முதல் தொடங்க இருக்கிறது. இரண்டு ஆண்டுகள் தடைக்குப் பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் களமிறங்க உள்ளது. இந்த சீசனுக்கான ஏலம் கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நிலையில், இந்திய அணியின் மூத்த மற்றும் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் சென்னை அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Advertisment

பொதுவாக ஐ.பி.எல். போட்டிகளில் சென்னை அணியைச் சேர்ந்த வீரர்கள், சென்னைவாசிகளாகவே மாறிவிடுவது வழக்கம். ஆனால், அவர்கள் சென்னை அணிக்காக விளையாடத் தொடங்கிய பின்னரே, அதன் தாக்கத்தை உணரமுடியும். ஆனால், சென்னை அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஹர்பஜன் சிங், சென்னை அணிக்காக விளையாடுவதற்கு முன்பிருந்தேபலமுறை தமிழில் ட்வீட் செய்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். இன்னொருவரின் கட்டுப்பாட்டின்கீழ்இந்த ட்வீட்டுகள் பகிரப்பட்டாலும், தமிழ் வட்டார வழக்கில் வரும் அந்த ட்வீட்டுகள் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.

ஐ.பி.எல். சீசன் 11 தொடங்க இன்னும் சில நாட்களேஇருக்கும் நிலையில், ஹர்பஜன் சிங்கின் ட்விட்டர் பக்கத்தில், உங்க வீட்டுப்புள்ள சேப்பாக்கத்துல, மஞ்ச ஜெர்சில, "வீரமா", காதுகிழியிற உங்க விசிலுக்கு நடுவுல @ChennaiIPL க்காக விளாட(ச) போறத நெனச்சாலே "மெர்சலாகுது" என பதிவிடப்பட்டுள்ளது.

MS Dhoni CSK Harbajan Singh
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe