Skip to main content

நான் நல்ல உடல்தகுதியுடன் இருக்கிறேன்! - விராட் கோலி நம்பிக்கை

Published on 23/06/2018 | Edited on 23/06/2018

இங்கிலாந்து தொடருக்கு செல்வதால் தான் நல்ல உடல்தகுதியுடன் இருப்பதாக கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.
 

virat

 

 

 

இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, டெல்லி விமானநிலையத்தில் இருந்து இன்று புறப்பட்டது. இந்த அணி வரும் ஜூன் 27, 29 தேதிகளில் அயர்லாந்து அணியுடன் டி20 போட்டியிலும், ஜூலை 3 முதல் இங்கிலாந்து அணியுடன் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 5 டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் விளையாட இருக்கிறது. 
 

 

 

இந்நிலையில், இங்கிலாந்து செல்வதற்கு முன்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த கேப்டன் விராட் கோலி, ‘பலரும் நாங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு வெளிநாட்டுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வதாக பேசிவருகிறார்கள். சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் நாங்கள் விளையாடியதை யாரும் நினைக்கவில்லை. ஒவ்வொரு சுற்றுப்பயணங்களிலும் நான் வித்தியாசமான ஒருவனாக மாறிவிடுவேன். உண்மையில், கிரிக்கெட்டைப் பற்றி கூட நான் யோசிக்கமாட்டேன். நல்ல ஃபார்மில் இருந்தால் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும் என்று எனக்குத் தெரியும். தென் ஆப்பிரிக்கா உடனான டெஸ்ட் தொடருக்குப் பிறகு, ஒரு கடினமான டெஸ்ட் தொடரில் கலந்துகொள்ள வேண்டும் என்று விரும்பினோம்’ என பேசியுள்ளார்.
 

ஐ.பி.எல். போட்டியின்போது கழுத்தில் ஏற்பட்ட காயத்தால் இங்கிலாந்து கவுண்டியில் விளையாட முடியாமல் போனதுபற்றி கேட்டபோது, ‘நான் இப்போது நூறு சதவீத உடல்தகுதியுடன் இருக்கிறேன். அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டேன். இங்கிலாந்து தொடர் சிறப்பாக அமையும் என நம்புகிறேன்’ என பதிலளித்துள்ளார்.