இந்தியாவிற்கு மேலும் ஒரு பதக்கம் - வில்வித்தையில் அசத்திய ஹர்விந்தர் சிங்!

harvinder singh

டோக்கியோவில் நடைபெற்றுவரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியா தொடர்ந்து பதக்கங்களைக் குவித்துவருகிறது. இன்று நடைபெற்ற போட்டிகளிலும்இந்திய வீரர்கள் பதக்கங்களைவென்று அசத்தி வருகின்றனர்.

இன்று(03.09.2021) நடைபெற்ற பாராலிம்பிக்ஸ்உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் பிரவீன்குமார் வெள்ளிப் பதக்கம் வென்றார். அதேபோல்ஏற்கனவே10 மீட்டர் ஏர் ரைஃபிள் போட்டியில் தங்கம் வென்றிருந்தஅவனி லெகாரா, இன்று நடைபெற்ற50 மீட்டர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் வெண்கல பதக்கத்தை வென்று அசத்தினார்.

இதன் தொடர்ச்சியாகதற்போதுஹர்விந்தர் சிங், ஆண்களுக்கான தனிநபர் வில்வித்தையில் வெண்கலம் வென்று சந்தித்துள்ளார். இது இன்றைய நாளில் இந்தியா வெல்லும் மூன்றாவது பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

harvinder singh paralympics
இதையும் படியுங்கள்
Subscribe