Advertisment

மும்பையை விடுங்கள், சென்னையை பாராட்டியே ஆக வேண்டும்- ஹர்ஷா போக்ளேவின் வைரல் ட்வீட்...

2019 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டி நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது. இதில் சென்னையை வீழ்த்தி மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Advertisment

harsha bhogle tweet about ipl final match

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டியில் கடைசி பந்தில் சென்னை அணி 2 ரன்கள் எடுக்க வேண்டிய நிலையில் இருந்த போது விக்கெட் விழுந்தது. இதனையடுத்து ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணி வென்று கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் மும்பை ரசிகர்களும், சென்னை ரசிகர்களும் மாறிமாறி மீம்ஸ் போட்டு வருகின்றனர். இந்நிலையில் கிரிக்கெட் வர்ணனையாளரான ஹர்ஷா போக்ளே ட்வீட் ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், "எப்போதும் வெற்றி பெற்றவர்களை இந்த நேரத்தில் கொண்டாடுவோம். ஆனால் அதனைச் சிறிது நிறுத்திவிட்டு இந்த சீசனில் மிகச் சிறப்பாக விளையாடிய சிஸ்கேவை நீங்கள் பாராட்டியே ஆக வேண்டும்" என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த ட்வீட் பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

CSK ipl 2019
இதையும் படியுங்கள்
Subscribe