Advertisment

போலிச்சான்றிதழ் கொடுத்த ஹர்மன்பிரீத்! - பறிபோகிறதா டி.எஸ்.பி. வேலை?

இந்திய மகளிர் டி20 கிரிக்கெட் அணியின் கேப்டனாக செயல்பட்டு வருபவர் ஹர்மன்பிரீத் கவுர். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த இவர், 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் 9 போட்டிகளில் 359 ரன்கள் விளாசினார். குறிப்பாக ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 171 ரன்கள் எடுத்து அசத்தினார்.

Advertisment

harmanpreet

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

Advertisment

இதனால், இந்திய அரசு அவருக்கு அர்ஜூனா விருது வழங்கி கவுரவித்தது. பஞ்சாப் மாநில அரசு டி.எஸ்.பி. பதவி வழங்க, மேற்கு ரயில்வேயில் பார்த்துவந்த வேலையை விட்டு விலகினார். டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்த அன்று 2011ஆம் ஆண்டு சவுத்ரி சவுகான் சிங் பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்ததாக சான்றிதழ்களை சமர்ப்பித்தார். ஆனால் இந்த சான்றிதழ்கள் போலி என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில், ஹர்மன்பிரீத் கவுருக்கு அரசு வழங்கிய கவுரவ டி.எஸ்.பி. பதவியை திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளது. அவரது 12ஆம் வகுப்பு தகுதிக்கு தற்போதைய நிலையில் துணைநிலை காவலர் பதவி மட்டுமே வழங்கமுடியும். அதேசமயம், போலிச்சான்றிதழ்கள் வழங்கிய குற்றத்திற்காக ஹர்மன்பிரீத் கவுர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவர்மீதான குற்றச்சாட்டுகள் உறுதிசெய்யப்பட்டால், அவருக்கு வழங்கப்பட்ட அரசு உதவிகள், அர்ஜூனா விருது உள்ளிட்ட பலவும் பறிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

mithali raj indian cricket harmaanpreet kaur sports
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe