Hardik Pandya withdraws from the World Cup series 2023

Advertisment

இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக நடப்பு உலகக் கோப்பை தொடரிலிருந்து விலகியுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தொடர் வெற்றியைப் பெற்று இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி மும்பையில் நடைபெற்ற இந்தியா - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பந்தை தடுக்க முற்பட்டபோது, ஹர்திக் பாண்ட்யா கால் இடறி கீழே விழுந்தார். இதனால் காயம் காரணமாக பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதனிடையே பேட்டிங் பயிற்சியில் மட்டும் ஈடுபட்டு வந்தஅவருக்குச் சரியாக பந்து வீசுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மீண்டும் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.இந்த நிலையில் நடப்பு உலகக் கோப்பை தொடரிலிருந்து ஹர்திக் பாண்ட்யா விலகியுள்ளார். அவருக்குப் பதிலாகபிரசித் கிருஷ்ணா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.