Skip to main content

சக வீரர்களைக் கலாய்த்த பாண்டியா - ரஸ்க் தந்து கிண்டலடித்த தோனி (வீடியோ)

விமானத்தில் சகவீரர்களை ஜாலியாக கிண்டல் செய்து பேட்டி காணும் ஹர்தீக் பாண்டியாவின் வீடியோ வெளியாகியுள்ளது.
 

Pandya

 

 

 

இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி, டெல்லியில் இருந்து தனி விமானத்தில் கிளம்பியது. விமானத்தில் இருந்த ஹர்தீக் பாண்டியா மற்றும் யதுவேந்திர சஹால் ஆகிய இருவரும் சக வீரர்களின் இருக்கைக்கு சென்று அவர்களிடம் ஜாலியாக பேட்டி கண்டனர். இந்த வீடியோவை பிசிசிஐ தனது இணையதளப் பக்கத்தில் வெளியிட்டது. 
 

அதில், கேப்டன் விராட் கோலியிடம் இங்கிலாந்து சுற்றுப்பயணம் பற்றிக் கேட்கும் ஹர்தீக் பாண்டியா, வரிசையாக குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், கே.எல்.ராகுல், ரோகித் ஷர்மா, பும்ரா என ஒவ்வொருவரையும் சந்திக்கிறார். அப்படியே தோனி இருக்கும் இருக்கையை நோக்கி சென்று ஹாய் மகி பாய் என்று கூறியதும், தோனி தன் கையில் இருந்த ரஸ்க்கைத் தந்து இடத்தைக் காலி செய்யுமாறு சைகை காட்டுகிறார் (வீடியோ காண). பின்னர் தான் தப்பித்து விட்டதை எண்ணி குலுங்கிச் சிரிக்கிறார். அந்த ரஸ்க்கைக் கையில் வாங்கிய பாண்டியா பாய் மகி பாய் எனக் கூறிவிட்டு, ஷிகர் தவானிடம் வந்து ரகளை செய்கிறார். 
 

 

 

 

இந்த வீடியோ காட்சியைப் பார்த்த ரசிகர்கள் சக வீரர்களைக் கலாய்த்துக் கொண்டிருக்கும் ஹர்தீக் பாண்டியாவிற்கு, தோனி டோட்டல் டேமேஜ் தந்துவிட்டதாக கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்