Advertisment

ஊர்சுற்றப் போனீங்களா பாண்டியா? - வறுத்தெடுத்த நெட்டிசன்கள்!

இங்கிலாந்துக்கு விளையாடப் போனீங்களா? ஊர்சுற்றப் போனீங்களா? என கிரிக்கெட் ரசிகர்கள், இந்திய வீரர் ஹர்தீக் பாண்டியாவை வறுத்தெடுத்து வருகின்றனர்.

Advertisment

Hardik

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, மோசமான விளையாட்டை வெளிப்படுத்தியதால், இந்திய ரசிகர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஏறத்தாழ கோலி, அஸ்வினைத் தவிர வேறு யாரும் சரியாக விளையாடம் போனது, இந்தியாவின் முன்னாள் வீரர்களையே கோபம் கொள்ளச் செய்தது. பலரும் தங்கள் விமர்சனங்களைக் காட்டமாக முன்வைத்து வருகின்றனர்.

Advertisment

style="display:inline-block;"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="9546799378">

குறிப்பாக, முக்கியப் பொறுப்புள்ள ஆல்ரவுண்டர் ஹர்தீக் பாண்டியா சரியாக விளையாடவில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்துவருகின்றன. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் மைக்கேல் ஹோல்டிங், “ஹர்தீக் பாண்டியா ஒரு ஆல்ரவுண்டரைப் போல இன்னமும் செயல்படவில்லை. அவர் இன்னமும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது. முழுமையாக பொறுப்பை ஏற்றுக்கொண்டு செயல்பட வேண்டுமானால், அவர் தனது திறமையை நூறு சதவீதம் காட்டவேண்டும்” என விமர்சித்திருந்தார்.

#TravelDay ? ?⌚? ? LONDON ? NOTTINGHAM

A post shared by Hardik Pandya (@hardikpandya93) on

இந்நிலையில், நாட்டிங்காம் தொடருக்காக அங்கு சென்றுள்ள இந்திய அணியில் இடம்பெற்றுள்ள பாண்டியா, பயணம் மேற்கொண்டிருப்பதாக தனது புகைப்படம் ஒன்றை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். இந்தப் பதிவைக் கண்ட ரசிகர்கள் பலர் அவரை கடுமையாக அர்ச்சித்துள்ளனர். ஒருவர், ‘நல்லா என்ஜாய் பண்ணுங்க ஹர்தீக்.. உங்களோட முதலும், கடைசியுமான இங்கிலாந்து தொடர் இது’ என்றும், ‘ஊர்சுத்துனது போதும், விளையாட்டில் கவனம் செலுத்துங்க ஹர்தீக்’ என்று மற்றொருவரும் என பலரும் திட்டித்தீர்த்துள்ளனர்.

sports England Cricket Hardik pandya indian cricket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe