Advertisment

பிரபல நடிகையுடன் மோதிரம் மாற்றிக்கொண்ட ஹர்டிக் பாண்டியா... வைரலாகும் புகைப்படங்கள்....

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ஹர்டிக் பாண்டியா தனது காதலியுடன் மோதிரம் மாற்றிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisment

hardik pandya got hitched with actress natasha

இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான பாண்டியா முதுகுவலி காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் உள்ளார். மெல்ல மெல்ல உடல்நலம் தேறிவரும் அவர், தனது காதலியாக நீண்ட நாட்கள் கிசுகிசுக்கப்பட்டு வந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் உடன் மோதிரம் மாற்றிக்கொண்டுள்ளார்.

தமிழில் 'அரிமா நம்பி' படத்தில் 'நான் உன்னில் பாதி' என்ற பாடலுக்கு நடனமாடியுள்ள நடாஷா, பாலிவுட் படங்களிலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் பிரபலமானவர். சமீப காலமாகவே இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதுகுறித்து இருவர் தரப்பிலும் எந்த பதிலும் கூறப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிரம் மாற்றிக் கொண்டு புகைப்படங்களையும், வீடியோவையும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கப்பலில் நடைபெற்ற இந்த விழாவில் இருவரின் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டுள்ளனர்.இவர்களின் இந்த நிச்சய விழாவிற்கு ரசிகர்கள் தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன.

team india Hardik pandya
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe