Skip to main content

பிரபல நடிகையுடன் மோதிரம் மாற்றிக்கொண்ட ஹர்டிக் பாண்டியா... வைரலாகும் புகைப்படங்கள்....

Published on 02/01/2020 | Edited on 02/01/2020

இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த ஆல் ரவுண்டரான ஹர்டிக் பாண்டியா தனது காதலியுடன் மோதிரம் மாற்றிக்கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

hardik pandya got hitched with actress natasha

 

 

இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான பாண்டியா முதுகுவலி காரணமாக அறுவைசிகிச்சை மேற்கொண்டு ஓய்வில் உள்ளார். மெல்ல மெல்ல உடல்நலம் தேறிவரும் அவர், தனது காதலியாக நீண்ட நாட்கள் கிசுகிசுக்கப்பட்டு வந்த நடிகை நடாஷா ஸ்டான்கோவிக் உடன் மோதிரம் மாற்றிக்கொண்டுள்ளார்.

தமிழில் 'அரிமா நம்பி' படத்தில் 'நான் உன்னில் பாதி' என்ற பாடலுக்கு நடனமாடியுள்ள நடாஷா, பாலிவுட் படங்களிலும், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலமும் பிரபலமானவர். சமீப காலமாகவே இருவரும் காதலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், இதுகுறித்து இருவர் தரப்பிலும் எந்த பதிலும் கூறப்படாமல் இருந்தது. இந்நிலையில் தற்போது இருவரும் ஒருவருக்கு ஒருவர் மோதிரம் மாற்றிக் கொண்டு புகைப்படங்களையும், வீடியோவையும் தங்களது சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது. கப்பலில் நடைபெற்ற இந்த விழாவில் இருவரின் நெருங்கிய நண்பர்கள் கலந்துகொண்டுள்ளனர். இவர்களின் இந்த நிச்சய விழாவிற்கு ரசிகர்கள் தரப்பிலிருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. 

 

 

Next Story

விஜயகாந்த் மறைவுக்கு இந்திய கிரிக்கெட் வீரர் இரங்கல்

Published on 29/12/2023 | Edited on 29/12/2023
Indian cricketer Washington Sundar condoles death of Vijayakanth

நடிகரும் தேமுதிக நிறுவனத் தலைவரும், முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான, விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று காலை உயிரிழந்தார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது உடல் சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்பு, சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும், தேமுதிக நிர்வாகிகளும், திரையுலகப் பிரபலங்களும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வந்தனர். மக்கள், ரசிகர்கள், தொண்டர்கள் என ஆயிரக்கணக்கான மக்கள் தேமுதிக அலுவலகம் முன்பு திரண்டு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து கூட்டம் அதிகமாக வரவே, விஜயகாந்தின் உடல் சென்னை தீவுத்திடலுக்கு மாற்றப்பட்டு பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மதியம் 1 மணிக்கு மேல் தீவுத்திடலில் இருந்து இறுதி ஊர்வலம் புறப்பட்டு பூந்தமல்லி சாலை வழியாக கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. அங்கு பல்லாயிரக்கணக்கானோர் குவிந்து விஜயகாந்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அதுபோக, தொடர்ந்து வெளியூர்களில் இருந்து மக்கள் தீவுத் திடலை நோக்கி வந்துகொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் வாஷிங்டன் சுந்தர் விஜயகாந்த்தின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். 

Next Story

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அதிர்ச்சி கொடுத்த ஹர்திக் பாண்டியா!

Published on 23/12/2023 | Edited on 23/12/2023
Hardik Pandya shocked Mumbai Indians

ஐபிஎல் - 2024 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்ட்யா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியிலிருந்து ஹர்திக் பாண்ட்யாவை மும்பை இந்தியன்ஸ் அணி அண்மையில் வாங்கியிருந்த நிலையில் கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஐந்து முறை ஐபிஎல் கோப்பை பெற்றுக் கொடுத்த ரோஹித் சர்மாவை கேப்டன் பதவியிலிருந்து விடுவித்து ஹர்திக் பாண்ட்யா நியமிக்கப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது.

கடந்த 10 ஆண்டுகளாக மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய ரோஹித் ஷர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்ட்யாவை கேப்டனாக அறிவித்து மும்பை இந்தியன்ஸ் அணியின் நிர்வாகம்,  ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்துள்ளதாக மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தங்களது ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும், மும்பை இந்தியன்ஸ் அணியின் இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக் பக்கத்தில் பின்தொடர்பவர்கள் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து வந்தது.

இதனிடையே, சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணிக்காக விளையாடியபோது ஹர்திக் பாண்டியாவின் காலில் காயம் ஏற்பட்டது. இதனால், அவர் தொடர்ந்து விளையாட முடியாமல் உலகக் கோப்பை தொடரில் இருந்து விலகினார். இந்த காயம் காரணமாக வரும் ஜனவரி 11 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை நடைபெறும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஹர்திக் பாண்டியா பங்கேற்கமாட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமல்லாமல், ஹர்திக் பாண்டியாவுக்கு காயம் சரியாக இன்னும் சில மாதங்கள் எடுக்கும் நிலையில், வருகின்ற ஐபிஎல் தொடரிலும் பங்கேற்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. தற்போது ஹர்திக் பாண்டியா விலகும் பட்சத்தில் ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோஹித் சர்மாவே செயல்படுவாரா? அல்லது சூர்யகுமார் யாதவ் நியமிக்கப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.