இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான இருபது ஓவர்போட்டித்தொடர் தற்போது நடைபெற்றுவருகிறது. முதலாவதுஇருபது போட்டியில்இந்தியஅணி வெற்றபெற்ற நிலையில், நேற்று இரண்டாவது போட்டி நடைபெற்றது. இப்போட்டியில், ஹர்திக்பாண்டியாவின்அதிரடியால் இந்தியவென்றதோடு, தொடரையும்கைப்பற்றியது.
அதிரடியாக விளையாடி அணியை வெற்றிபெற வைத்த ஹர்திக்பாண்டியாஆட்டநாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில், ஹர்திக் பாண்டியவிடம், குழந்தை பிறந்த பிறகு உங்கள் வாழ்க்கை மாறிவிட்டதா எனகேட்கப்பட்டது. இதற்குபதிலளித்த ஹர்திக் பாண்டியா, அது ஒரு வித்தியாசமான அனுபவம் எனகுறிப்பிட்டார்.
இதுகுறித்துஅவர் கூறியதாவது, "குழந்தை பிறந்ததுஒரு வித்தியாசமான அனுபவம். குழந்தை பிறந்ததும்நீங்கள்அமைதியாகிவிடுவீர்கள். மேலும் வாழ்க்கையை வேறுவிதமாகபார்க்க ஆரம்பித்துவிடுவீர்கள். குழந்தை பிறந்த பிறகு, எனது குடும்பத்தை பற்றிய எனதுபார்வை மாறியிருக்கிறது எனநினைக்கிறேன். நானும்மாறியிருக்கிறேன். நான் இப்போது அவனைபிரிந்திருப்பதை உணர்கிறேன். அவனை பார்ப்பதற்காக, இங்கிருந்து கிளம்பகாத்துக்கொண்டிருக்கிறேன். அவன் 15 நாள் குழந்தையாக இருக்கும்போது அவனைபிரிந்து வந்தேன். இப்போது அவன் 4 மாதகுழந்தையாகியிருப்பான்" எனஉருக்கமாக கூறினார்.