Advertisment

ஐபிஎல் தொடரில் இருந்து விலகியது குறித்து ஹர்பஜன்சிங் விளக்கம்...!

harbhajan singh

Advertisment

கரோனா காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட 13-வது ஐபிஎல் தொடரானது இந்த மாதம் 19-ம் தேதி அமீரகத்தில் தொடங்க இருக்கிறது. இத்தொடர் தொடங்குவதற்கு இன்னும் 15 நாட்களுக்கும் குறைவான நாட்களே உள்ளன. அனைத்து அணி வீரர்களும் தீவிரமான கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு இடையே பயிற்சி எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இத்தொடரில் இருந்து விலகுவதாக சென்னை அணி வீரர் ஹர்பஜன்சிங் அறிவித்தார். மேலும் அணியில் இருந்து விலகியது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார்.

அதில் அவர், "என்னுடைய தனிப்பட்ட காரணங்களுக்காக இந்தாண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் பங்கெடுக்கவில்லை. இது நெருக்கடியான நேரம் என்பதால் உரிய பாதுகாப்போடு எனது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடப் போகிறேன். சென்னை அணி நிர்வாகம் எனக்கு முழு பக்கபலமாக இருக்கிறது. இத்தொடர் சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார். சென்னை அணியின் நட்சத்திர வீரரான ரெய்னாவும் தன்னுடைய சொந்த காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலகுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

HARBHAJAN SINGH
இதையும் படியுங்கள்
Subscribe