Advertisment

விரைவில் ஓய்வை அறிவிக்கும் ஹர்பஜன் சிங்  - ஐபிஎல் அணியுடன் பேச்சுவார்த்தை!

harbhajan

இந்தியாவின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங், அணியில் இருந்து நீண்ட காலத்திற்கு முன்பே கழட்டிவிடப்பட்டாலும்ஓய்வை அறிவிக்காமல் இருந்து வந்தார். அதேநேரத்தில்மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்ளிட்ட அணிகளுக்காகவும்விளையாடி வந்தார்.

Advertisment

இந்தநிலையில்ஹர்பஜன் சிங், அடுத்த வாரத்தில் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவிக்கலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஓய்வுக்கு பிறகு அவர் ஐபிஎல் அணி ஒன்றில் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், இதுதொடர்பாகஒரு அணி நிர்வாகத்திடம் அவர் பேசி வருவதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Advertisment

மேலும் அந்த அணியுடன் ஒப்பந்தம் கையெழுத்தான பிறகு, அதுகுறித்து ஹர்பஜன் சிங் அறிவிப்பார் என்றும் அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.

HARBHAJAN SINGH IPL
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe