Harbhajan Singh

இந்தாண்டு சென்னை அணிக்கு கோப்பையை வெல்ல வாய்ப்பிருக்கிறது என சென்னை அணியின் மூத்த வீரர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

Advertisment

13-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற இப்போட்டியில் சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை அணி வீரர் அம்பதி ராயுடு அதிரடியாக விளையாடி 48 பந்துகளில் 71 ரன்கள் குவித்து, அணியின் வெற்றியை எளிமைப்படுத்தினார். அதனையடுத்து அவருக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. சொந்த காரணங்களுக்காக இத்தொடரில் இருந்து விலகியுள்ள சென்னை அணி வீரர் ஹர்பஜன் சிங், சென்னை அணியின் வெற்றி குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "இரண்டு வருடங்களுக்கு முன்பு சென்னை அணி கோப்பையை வென்ற தொடரில், இதேபோல மும்பை அணியை முதல் போட்டியில் வீழ்த்தினோம். நமக்கு இது நல்ல சகுனமாக தெரிகிறது. மீண்டும் அதே போல வெற்றியுடன் முடிப்போம் என்று நம்புகிறேன்" எனக் கூறினார்.