நேற்று ஐபிஎல் தொடரில் சென்னை- ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் சென்னை எம்,ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் வழக்கம்போல கடைசி ஓவர் வரை சென்ற ஆட்டத்தில் சென்னை அணி த்ரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கு பின் சி.எஸ்.கே அணியின் பந்துவீச்சாளரான ஹர்பஜன் சிங் ட்வீட் ஒன்றை போட்டார். வழக்கமான தனது ஸ்டைலில் தமிழ் ட்வீட் ஒன்றை அவர் பதிவிட்டார். கடந்த வாரம் வெளியாகி திரையரங்களில் ஓடிக்கொண்டிருக்கும் சூப்பர் டீலக்ஸ் படத்தின் ட்ரைலரில் வரும் வசனத்தை போல பதிவிடப்பட்ட அந்த ட்வீட் தற்போது வைரலாகி வருகிறது.அந்த டீவீட்டுக்கு கீழே அவர் விஜய் சேதுபதிக்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.