Halted match-IPL fans worried

Advertisment

சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் இறுதிப்போட்டி நேற்று மழை காரணமாக முழுவதும் நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற போட்டியில் பாதியில் மழை பொழிந்ததால் போட்டியானது நிறுத்தப்பட்டுள்ளது.

16 ஆவது ஐபிஎல் போட்டியில் சென்னை - குஜராத் அணிகளுக்கு இடையேயான இறுதிப் போட்டி நேற்று மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில், இன்று தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 214 ரன்கள் எடுத்திருந்தது.

பின்னர் 215 ரன்கள் இலக்காக வைத்து களத்தில் இறங்கிய சென்னை அணி மூன்று பந்துகளில் நான்கு ரன்கள் எடுத்திருந்த நிலையில் திடீரென மழை பொழிந்தது. இதனால் தற்பொழுது போட்டியானது மழை காரணமாக நிறுத்தப்பட்டுள்ளது. நேற்றே ஐபிஎல் இறுதிப்போட்டி நிறுத்தி வைக்கப்பட்டது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்த நிலையில், தற்போது போட்டி பாதியில் நிறுத்தப்பட்டது மேலும் ரசிகர்களை கவலையடைய செய்துள்ளது.