ஐசிசி அமைப்பிற்கு புதிய தலைவர் நியமனம்!

Greg Barclay

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் தலைவராக நியூஸிலாந்தைச் சேர்ந்த கிரேக் பார்க்கிளே நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

ஐசிசி அமைப்பின் தலைவராக செயல்பட்டு வந்த இந்தியாவைச் சேர்ந்த சஷாங் மனோகர் பதிவிக்காலம்ஜூலை மாதம் நிறைவடைந்தது. இதனையடுத்து, தற்காலிக தலைவராக இம்ரான் கவாஜா நியமிக்கப்பட்டார்.இந்நிலையில், ஐசிசி அமைப்பின் புதிய தலைவராக கிரேக் பார்க்கிளே செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2012-ம் ஆண்டு முதல் கிரேக் பார்க்கிளே நியூசிலாந்து கிரிக்கெட் வாரிய இயக்குனராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ICC
இதையும் படியுங்கள்
Subscribe