செண்டை மேளங்கள் முழங்க சின்னப்பம்பட்டி எக்ஸ்பிரஸுக்கு வரவேற்பு!

natarajan

ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடிய இந்தியஅணி, டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியாவை அதன்சொந்தமண்ணில்இரண்டாம் முறையாக வீழ்த்திய வரலாற்று வெற்றியுடன் தாய்நாடு திரும்பியுள்ளது. இதனைத்தொடர்ந்து இந்திய வீரர்கள், இன்று தங்களது வீட்டிற்குப் புறப்பட்டுச் சென்றனர்.

இந்தநிலையில், நெட்பவுலராக இந்திய அணியோடுசென்று, ஒருநாள், இருபது ஓவர், டெஸ்ட்ஆகிய மூன்று வடிவப் போட்டிகளிலும் இந்தியாவிற்கு அறிமுகமான நடராஜனுக்கு, அவரது சொந்தஊரானசின்னப்பம்பட்டியில் உற்சாகவரவேற்பு அளிக்கப்பட்டு வருகிறது.

குதிரைகள் பூட்டப்பட்டசாரட் வண்டியில்நடராஜன், ஊர்வலமாக அழைத்துவரப்படுகிறார். செண்டைமேளங்கள் அதிர, நடராஜன் வரும் வழியெங்கும், அவரின் கிராம மக்களும், ரசிகர்களும் நடராஜனுக்குஉற்சாகவரவேற்பு அளித்து வருகின்றனர்.

india cricket player indian cricket Natarajan T
இதையும் படியுங்கள்
Subscribe