கடந்த மாதம் தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் 800 மீட்டர் பிரிவில் தங்கம் வென்றவர் தமிழகத்தை சேர்ந்த கோமதி மாரிமுத்து. இவருக்கு நாடு முழுவதிலுமிருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Advertisment

gomathi

இந்நிலையில் கோமதி தடை செய்யப்பட்ட ஸ்டெராய்டு போன்ற பொருட்களை பயன்படுத்தியதற்கான சாத்தியங்கள் இருக்கின்றன என டெக்கன் ஹெரால்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டது.

Advertisment

இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ள கோமதி, "இந்த தகவல் முற்றிலும் பொய்யானது. இப்படி ஒன்று பேசப்படுவதை நானே செய்திதாளை பார்த்து தான் தெரிந்துகொண்டேன். இதுகுறித்து தேசிய தடகள சம்மேளனத்திடம் விளக்கம் கேட்டுள்ளேன். எதன் அடிப்படையில் இவ்வாறு செய்தி வெளியிடப்பட்டது என தெரியவில்லை" என கூறினார். மேலும் இதுகுறித்து பேசிய கோமதியின் சகோதரரும் இந்த செய்தியை மறுத்துள்ளார்.

இந்நிலையில் கோமதியிடம் நடைபெற்ற முதற்கட்ட ஊக்கமருந்து சோதனையில் தோல்வி அடைந்துள்ளார் என்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஊக்கமருந்து சோதனைகள் அனைத்தும் நிரூபனமானால் தங்கப்பதக்கம் அவரிடம் இருந்து பறிக்கப்படும்.

Advertisment

இந்நிலையில்,கோமதி மாரிமுத்து ஊக்கமருந்து பயன்படுத்தியதாக வெளிவரும் செய்தி முற்றிலும் வதந்தி. இந்திய தடகள கூட்டமைப்பிடமிருந்து எங்களுக்கு எந்த வித தகவல்களும் வரவில்லை என்று கோமதி மாரிமுத்துவின் சகோதரர் சுப்ரமணி தெரிவித்துள்ளார்.