Advertisment

"யார்க்கர் வீசக்கூடிய சிறந்த பந்துவீச்சாளர்"... இந்திய வீரரை புகழ்ந்த மேக்ஸ்வெல்!

Maxwell

நடப்பு ஐபிஎல் தொடரில் யார்க்கர் வீசக்கூடிய சிறந்த பந்துவீச்சாளர் என்றால் ஷமிதான் என பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

Advertisment

13-வது ஐபிஎல் தொடரின் 38-வது லீக் போட்டியில் டெல்லி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இப்போட்டியில், பஞ்சாப் அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 10 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி, 4 வெற்றிகள், 6 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைபட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளது. தொடரின் தொடக்கத்தில் கடும் சரிவைசந்தித்துவந்த பஞ்சாப் அணி, கடந்த 3 போட்டிகளில் தொடர் வெற்றிபெற்று அதிரடி எழுச்சி பெற்றுள்ளது. இவ்வெற்றியின் மூலம் பஞ்சாப் அணி அடுத்த சுற்றுக்குசெல்லும் வாய்ப்பில் நீடிக்கிறது. இந்நிலையில், பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல், ஷமியின் ஆட்டம் குறித்துபேசியுள்ளார்.

Advertisment

அதில் அவர், "நடப்பு தொடரில் யார்க்கர் வீசக்கூடிய சிறந்த பந்துவீச்சாளர் என்றால் அது ஷமிதான். நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக பந்துவீசினார். கடந்த போட்டியில் சூப்பர் ஓவரில் அவர் பந்து வீசிய விதத்தை நாம் அனைவரும் பார்த்தோம். ஷமி அணிக்காக சிறப்பாக விளையாடிவருகிறார்அவருக்கு வாழ்த்துகள்" எனக் கூறினார்.

Mohammed shami Maxwell
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe