Advertisment

நோ-பாலுக்கு எதுக்கு ஃப்ரீ ஹிட்? - விளாசும் முகமது ஆமிர்

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளராக தேர்வானபோது, உலகின் மிக அச்சுறுத்தல் மிகுந்த பவுலர் என புகழப்பட்டவர் முகமது ஆமிர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டியில் ஒரே ஓவரில் நான்கு விக்கெட் வீழ்த்தி சாதனைபடைத்த அவர், ஊக்கமருந்து சர்ச்சையில் சிக்கிஐந்து ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடைவிதிக்கப்பட்டார்.

Advertisment

amir

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="5420060568"

data-ad-format="link">

தற்போது மீண்டும் அணியில் இணைந்து, மிகச்சிறப்பாக செயல்பட்டு வரும் ஆமிர், பேட்டியொன்றில் கலந்துகொண்டு பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார். ஆமிருக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. விராட் கோலிக்கு பந்துவீசுவது கூட கடினமாக தெரியவில்லை. என் 9 மாத குழந்தை மின்சாவுக்கு அப்பாவாக இருந்து கவனித்துக்கொள்வது பெரிய காரியமாக இருக்கிறது என தெரிவித்தார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ப்ரெய்ன் லாராவுக்கு பந்துவீசுவது என் வாழ்நாள் கனவாக இருக்கிறது. அவரது வீடியோக்களைப் பார்க்கும்போதெல்லாம் இந்த எண்ணம் எனக்குள் வருகிறது. அவர்தான் எதிர்கொள்வதற்கு கடினமான வீரரும் கூட என தனது விருப்பத்தைத் தெரிவித்த ஆமிர், அனைத்து ஃபார்மேட்டுகளிலும் ஹாட்ரிக் எடுக்கவேண்டும் என்றும், நோ-பாலுக்கு ஃப்ரீ-ஹிட் வழங்கும் முறையையும் முற்றிலுமாக நிறுத்தவேண்டும் என்றும் கூறியுள்ளார். தனது பந்தை புல் ஷாட் அடிப்பதை நான் விரும்பவில்லை என அதற்கான காரணமாக தெரிவித்துள்ளார்.

தனது பயோபிக் படத்தை யாரேனும் எடுத்தால், அதில் பாலிவுட் நடிகர் சாகித் கபூர் ஹீரோவாக நடிக்கவேண்டும் என்றும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

Pakistan cricket indian cricket
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe