subman gill

Advertisment

இந்தியகிரிக்கெட்அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. ஏற்கனவே ஒருநாள் மற்றும் 20 ஓவர்தொடர்முடிவடைந்த நிலையில், அடுத்ததாக டெஸ்ட்தொடர் நடைபெறவுள்ளது.

இந்தநிலையில், இந்தியடெஸ்ட்அணியில்இடம்பெற்றுள்ள, இளம் நட்சத்திரம் சுப்மன்கில், டெஸ்ட்தொடர் தொடங்குவதையொட்டி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஆஸ்திரேலியா அணி, ஸ்லெட்ஜிங் செய்தால், பதிலடி தரப்படும்எனத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாகசுப்மன்கில், "இந்தியவீரர்கள் மிகவும் ஆக்ரோஷமானவர்கள்இல்லை என்ற பெயரைக் கொண்டிருந்த காலம் இருந்தது. அதனைச் சாதமாக்கிக் கொண்டு, மற்றவர்கள்ஸ்லெட்ஜிங் செய்வார்கள்.இப்போது அவையெல்லாம் மாறிவிட்டன. அவர்கள் தங்கள் இஷ்டத்துக்கு எங்களை ஆட்டுவிக்க முயன்றால், அவர்கள் எதிர்பாராத நகர்வுகள் எங்களிடம் இருக்குமென்பது உறுதி" எனத்தெரிவித்துள்ளார்.