Advertisment

வார்னர் தகராறு.. ரபாடா நீக்கம்.. கேப்டன் ஸ்மித் விலகல்! - சர்ச்சைகளின் தொடர்

தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் ஏற்கெனவே இரண்டு போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இரண்டு அணிகளும் தலா ஒருபோட்டியில் வெற்றிபெற்றுள்ளன. மூன்றாவது போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Advertisment

Aussie

ஜெண்டில்மேன் கேம்என்று சொல்லப்பட்டாலும், ஸ்லெட்ஜிங் என்று சொல்லப்படும் வம்புக்கிழுக்கும் முறை கிரிக்கெட்டில் இன்றும்கடைபிடிக்கப்படுவது வழக்கம். இந்தத் தொடரின் தொடக்கமே அதற்குப் பஞ்சமில்லாமல்தான் ஆரம்பித்தது. முதல் டெஸ்ட்டில் ஏபி டிவில்லியர்ஸ் மீது நாதன் லயன் பந்தைப் போட்டுவிட்டு ஓடும்போது, டேவிட் வார்னர் கடுமையான வார்த்தைகளால் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி இருந்த நிலையில், வார்னரும் டீகாக்கும் ட்ரெஸ்ஸிங் ரூம் செல்லும் வழியில் சண்டை போட்டுக் கொண்டனர். இந்த சண்டையில் டீகாக்கின் மீது அனுதாப அலைகள் வீசியபொழுது, தன்னை தனிப்பட்ட முறையில் டீகாக் விமர்சித்தார் என்ற உண்மையை ஊரறிய உடைத்தார் வார்னர்.

Advertisment

Aussie

இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அனல்பறக்கும் தன் பந்துவீச்சால் ஆஸி வீரர்களை துவம்சம் செய்த ககீசோ ரபாடா, அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன்கள் ஸ்மித் மற்றும் வார்னர் விக்கெட்டுகளை கைப்பற்றியபோது தோளுக்கு தோளாக சென்று உரசியதாக சர்ச்சைகள் கிளம்பின. ரபாடாவின் இந்த நடத்தை குறித்து கேள்வியெழுப்பிய ஐசிசி, இரண்டு போட்டிகளில் விளையாட தடைவிதிக்க முடிவு செய்தது. ஆனால், பின்னர் அந்த முடிவு மாற்றியமைக்கப்பட்டு, ரபாடா மன்னிக்கப்பட்டார். இந்த மன்னிப்பு ஏற்றுக்கொள்ள முடியாதது என்று ஆஸி கேப்டன் ஸ்மித் கருத்து தெரிவித்தார்.

Aussie

தற்போது, மூன்றாவது டெஸ்ட் நடந்துகொண்டிருக்கும் சூழலில், மூன்றாவது நாளான நேற்று ஆஸி. அணியைச் சேர்ந்த கேமரூன் பான்கிராஃப்ட், தன் கையில் இருந்த பந்தை உப்புத்தாள் போன்ற பொருளால் தேய்த்து சேதப்படுத்திய வீடியோ காட்சிகள் வெளியாகின. இந்த விவகாரம் தற்போது உச்சகட்டத்தை எட்டி, ஆஸி. கிரிக்கெட் வாரியமே தலையிடும் நிலைக்கு போய்விட்டது. இதனால்,கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் பதவி விலகவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. ஆஸ்திரேலிய அணியின் கேப்டனாக விக்கெட் கீப்பர் டிம் பெய்ன் இனி வரும் போட்டிகளில் தொடர்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாங்கள் தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது என்று ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் இதுகுறித்து கருத்து தெரிவித்திருக்கிறார். மேலும், நான்காவது டெஸ்ட் போட்டியில் விளையாட ஸ்டீவன் ஸ்மித்துக்கு தடைவிதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, ஐபிஎல் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருக்கும் ஸ்மித், இந்த சீசனில் கலந்துகொள்வாரா என்ற கேள்வியும் இப்போதே எழத் தொடங்கியுள்ளது.

Aussie

இந்தத் தொடர் முடிவதற்கு முன்பாகவே இத்தனை பிரச்சனைகளைக் கடந்துவர வேண்டியதாகிவிட்டது இரு அணி வீரர்களுக்கும். இன்னும் ஒரு போட்டி மீதமிருக்கும் நிலையில், யார்யார் தலையெல்லாம் பிரச்சனையில் சிக்கப்போகிறதோ.

Australia cricket South Africa
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe