Skip to main content

சரியான நேரத்தில் சரியான ஃபார்மில் உள்ளார்... இந்திய வீரர் குறித்து கவுதம் காம்பீர் பேச்சு!

Published on 27/10/2020 | Edited on 27/10/2020

 

gautam gambhir

 

 

சரியான நேரத்தில் சரியான ஃபார்மில் உள்ளார் என ஷிகர் தவான் குறித்து கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

 

13-ஆவது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள், 4 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 11 போட்டிகளில் களமிறங்கியுள்ள தவான் 471 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும், தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்து புதிய சாதனை படைத்ததோடு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் ஷிகர் தவான் ஆட்டம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "தொடர்ச்சியாக இரு சதம் என்பதே மிகப்பெரிய சாதனை. இதுவரை எந்தவொரு வீரரும் படைத்தது இல்லை. அதுவும் 20 ஓவர் போட்டிகளில் என்பது மிகப்பெரிய விஷயம். டெல்லி அணிக்கு தேவைப்படும் நேரத்தில் சரியான ஃபார்மில் உள்ளார். அனுபவம் வாய்ந்த ஒரு வீரர், சரியான நேரத்தில்  ஃபார்மிற்கு வருவது அணிக்கு கூடுதல் பலம்" எனக் கூறினார்.

 

 

Next Story

RCB vs PBKS; நிதானமாக ஆடிய பஞ்சாப் கிங்ஸ்

Published on 25/03/2024 | Edited on 25/03/2024

 

RCB vs PBKS ipl live score update dhawan plays important knock

ஐபிஎல் 2024 ஆறாவது லீக் ஆட்டம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற பெங்களூர் அணி முதலில் பந்து வீச தீர்மானித்தது. அதன்படி பஞ்சாப் அணி முதல் பேட் செய்ய களமிறங்கியது. அந்த அணிக்கு துவக்கம் சரியாக அமையவில்லை. அந்த அணியின் முக்கிய ஆட்டக்காரர்களில் ஒருவரான பேர்ஸ்டோ 8 ரன்களில் ஆட்டம் இழக்க அடுத்து வந்த பிரப் சிம்ரன் சிங் 25 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 17 ரன்களில் ஆட்டம் இழந்தார். ஒரு பக்கம் விக்கெட்டுகள் விழுந்தாலும் மறுபக்கம் கேப்டன் தவான்  பொறுப்பாக ஆடி 45 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். சாம் கரண்,  ஜித்தேஷ் சர்மா ஜோடி ஓரளவு அதிரடி காட்டியது. சாம் கரண் 17 பந்துகளில் 23 ரன்களும் ஜித்தேஷ் சர்மா 20 பந்துகளில் 27 ரன்களும் எடுத்து ஆட்டம் இழந்தனர். கடைசி கட்ட ஓவர்களில் சஷாங் சிங்கின் 21 ரன்கள் பஞ்சாப் அணிக்கு கௌரவமான ஸ்கோரை எட்ட உதவியது. 20 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 176 ரன்கள் எடுத்தது.

பெங்களூர் அணி தரப்பில் சிராஜ் மற்றும் மேக்ஸ்வெல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் தயால், அல்சாரி ஜோசப் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் எடுத்தனர்.

பின்னர் 177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூர் அணி ஆடி வருகிறது. 6 ஓவர்கள் முடிவில் 50 ரன்கள் எடுத்து 2 விக்கெட்டுகளை இழந்துள்ளது. கேப்டன் டுபிளசிஸ் 3 ரன்களில் வீழ்ந்தார். க்ரீன் 3 ரன்களில்  ஆட்டமிழந்தார். கோலி 35 ரன்களுடனும், பட்டிதார் 3 ரன்களுடனும் ஆடி வருகின்றனர்.

Next Story

“உணர்ச்சிவசப்படாமல் இருங்கள்” - கம்பீருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுரை

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

Delhi High Court advises gautam Gambhir

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கௌதம் கம்பீருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. 

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் பாஜக எம்.பியுமான கௌதம் கம்பீர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். பிரபல இந்தி பத்திரிகை ஒன்று சமீபத்தில் கௌதம் கம்பீர் ஐபிஎல் போட்டிகளில்தான் பிஸியாக இருக்கிறார் என்று கட்டுரை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தன்னுடைய செயல்திறன் குறித்து தவறான கட்டுரையை வெளியிட்டுள்ளது என்று கூறி சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது 2 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், “நீங்கள் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். மக்கள் சேவையில் இருப்பவர். பொதுவாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாமல் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்து வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.