/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/gautam-gambhir-press--final_2.jpg)
சரியான நேரத்தில் சரியான ஃபார்மில் உள்ளார் என ஷிகர் தவான் குறித்து கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.
13-ஆவது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி அணி 11 போட்டிகளில் விளையாடி 7 வெற்றிகள், 4 தோல்விகள் கண்டு அணிகளுக்கான தரவரிசைப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது. டெல்லி அணியின் துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் நடப்பு ஐபிஎல் தொடரில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். 11 போட்டிகளில் களமிறங்கியுள்ள தவான் 471 ரன்கள் குவித்து, அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளார். மேலும், தொடர்ச்சியாக இரண்டு சதம் அடித்து புதிய சாதனை படைத்ததோடு அனைவரது கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் ஷிகர் தவான் ஆட்டம் குறித்து கருத்துதெரிவித்துள்ளார்.
அதில் அவர், "தொடர்ச்சியாக இரு சதம் என்பதே மிகப்பெரிய சாதனை. இதுவரை எந்தவொரு வீரரும் படைத்தது இல்லை. அதுவும் 20 ஓவர் போட்டிகளில் என்பது மிகப்பெரிய விஷயம். டெல்லி அணிக்கு தேவைப்படும் நேரத்தில் சரியான ஃபார்மில் உள்ளார். அனுபவம் வாய்ந்த ஒரு வீரர், சரியான நேரத்தில் ஃபார்மிற்கு வருவது அணிக்கு கூடுதல் பலம்" எனக் கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)