இந்தியாவில் வேகமாக அதிகரித்து வந்த கரோனாபாதிப்பு, தற்போது குறைய தொடங்கியுள்ளது. கடந்த 24 மணிநேரத்தில்2 லட்சத்து 55 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு மட்டும் கரோனாஉறுதியாகியுள்ளதாகமத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில்முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், பாஜக எம்.பியுமான கவுதம் கம்பீருக்கு கரோனாபாதிப்பு உறுதியாகியுள்ளது. தனக்கு லேசான அறிகுறிகள் ஏற்பட்டதாகவும், அதனைத்தொடர்ந்து சோதனை செய்துக்கொண்டதில் கரோனாதொற்று உறுதியாகி இருப்பதாகவும் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளகம்பீர், தன்னுடன் தொடர்பில் இருந்தவர்களை கரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும்கேட்டுக்கொண்டுள்ளார்.