Advertisment

"நான் பாகிஸ்தானுக்கு எதிரானவனில்லை" - கவுதம் காம்பீர் பதில்!

gautam gambhir

Advertisment

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், பா.ஜ.க எம்.பியுமான கவுதம் காம்பீர் சமூக வலைதளம் வாயிலாக உரையாடினார். கிரிக்கெட் ரசிகர்கள், அரசியல் ஆர்வலர்கள் எனப் பலரும் அவரிடம் பல்வேறு விதமான கேள்விகளை முன்வைத்தனர். அது ஒவ்வொன்றிற்கும் அவர் பதிலளித்து வந்தார். அப்போது ஒருவர் 'நீங்கள் ஏன் பாகிஸ்தானுக்கு எதிராக இருக்குறீர்கள்' எனக் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த கவுதம் காம்பீர், "நான் பாகிஸ்தானுக்கு எதிரானவனில்லை. எந்தவொரு இந்தியரும் பாகிஸ்தானுக்கு எதிரானவர்கள் இல்லை. எங்கள் ராணுவ வீரர்கள் உயிர் தொடர்பான விஷயங்களில் நாங்கள் அனைவரும் ஒரே பக்கம் தான் இருப்போம்" எனப் பதிலளித்தார்.

gautam gambhir
இதையும் படியுங்கள்
Subscribe