gautam gambhir

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், பா.ஜ.க மக்களவை எம்.பி.யுமான கவுதம் கம்பீர், தன்னுடைய குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் தன்னை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியிருக்கிறார்.

Advertisment

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "என்னுடைய வீட்டில் ஒருவருக்குக் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தற்போது தனிமைப்படுத்தலில் உள்ள நான், கரோனா பரிசோதனை முடிவிற்காகக் காத்திருக்கிறேன். அனைவரும் கரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி பாதுகாப்பாக இருங்கள்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Advertisment