2011 உலக கோப்பை வெற்றிக்கு தோனி மட்டுமே காரணமல்ல.. காம்பீர் கருத்தால் சர்ச்சை!

28 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2011ம் ஆண்டு இந்திய அணி இலங்கையை வீழ்த்தி உலககோப்பையை வென்றது. சரியாக ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் அந்த சாதனை நிகழ்த்தப்பட்டது. அதனால் ஒவ்வொரு ஆண்டும் ரசிகர்கள் இந்த சாதனையை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகிறார்கள். அதிலும் இறுதி ஆட்டத்தில் தோனி அடித்த சிக்சர் அனைவரின் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்திருக்கும். அந்த போட்டியில் தோனி இறுதி வரை ஆட்டமிழக்காமல் 91 ரன் எடுத்திருப்பார்.

இந்நிலையில் ஒரு தனியார் விளையாட்டு இணையதளம் தோனி சிக்சர் அடிக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, இந்த சிக்சர் மில்லியன் ரசிகர்களை கொள்ளை கொண்டது என்று பதிவிட்டு இருந்தது. இதற்கு பதில் அளித்துள்ள கம்பீர், "இந்த வெற்றிக்கு ஒட்டு மொத்த அணி, பயிற்சியாளர்கள்உள்ளிட்ட அனைவரும் காரணம், உங்களுக்கு சிக்சர் மேல் உள்ள அதீத விருப்பத்தை கைவிடுதல் நல்லது" என்று தெரிவித்துள்ளார். அந்த போட்டியில் கம்பீர் 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhoni
இதையும் படியுங்கள்
Subscribe