Advertisment

"அவர் அடுத்த தோனி அல்ல..." இந்திய இளம் வீரர் குறித்து கவுதம் கம்பீர் பேச்சு

gautam gambhir

அவர் அடுத்த தோனி அல்ல என ரிஷப் பண்ட் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

Advertisment

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனான தோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். அதனையடுத்து, தோனியின் இடத்தை நிரப்பப்போகும் வீரர் யார் என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன. இது குறித்து நீண்ட விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில்,ரிஷப் பண்ட் அந்த இடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று பலரும் தங்கள் கருத்தைக்கூறி வந்தனர். சில ஊடகங்களும் இதே கருத்தை பிரதிபலித்தன. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

Advertisment

அதில் அவர், "முதலில் ரிஷப் பண்ட்டை அடுத்த தோனி என்று கூறுவதை நிறுத்த வேண்டும். ஊடகங்களும் இவ்வாறு கூறுவதை நிறுத்துங்கள். ஊடகங்கள் தொடர்ந்து இவ்வாறு கூறும் போது, அவரும் தன்னை அப்படி நினைத்துக் கொள்ளக்கூடும். அவர் ஒருநாளும் தோனியாக முடியாது. தோனியைப் போல அவர் சிக்ஸர் அடிக்கிறார் என்பதற்காக மக்கள் அவரை தோனியுடன் ஒப்பிடத்தொடங்கியுள்ளனர். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலும் அவர் தன்னை நிறைய மேம்படுத்த வேண்டியுள்ளது" எனக் கூறினார்.

gautam gambhir rishabh pant
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe