Skip to main content

"அவர் அடுத்த தோனி அல்ல..." இந்திய இளம் வீரர் குறித்து கவுதம் கம்பீர் பேச்சு

Published on 06/11/2020 | Edited on 06/11/2020

 

gautam gambhir

 

 

அவர் அடுத்த தோனி அல்ல என ரிஷப் பண்ட் குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

 

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் கேப்டனான தோனி, சர்வதேச போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவித்தார். அதனையடுத்து, தோனியின் இடத்தை நிரப்பப்போகும் வீரர் யார் என்பது குறித்து பல கேள்விகள் எழுந்தன. இது குறித்து நீண்ட விவாதங்கள் நடைபெற்று வரும் வேளையில், ரிஷப் பண்ட் அந்த இடத்திற்கு பொருத்தமாக இருப்பார் என்று பலரும் தங்கள் கருத்தைக்கூறி வந்தனர். சில ஊடகங்களும் இதே கருத்தை பிரதிபலித்தன. இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான கவுதம் கம்பீர் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

 

அதில் அவர், "முதலில் ரிஷப் பண்ட்டை அடுத்த தோனி என்று கூறுவதை நிறுத்த வேண்டும். ஊடகங்களும் இவ்வாறு கூறுவதை நிறுத்துங்கள். ஊடகங்கள் தொடர்ந்து இவ்வாறு கூறும் போது, அவரும் தன்னை அப்படி நினைத்துக் கொள்ளக்கூடும். அவர் ஒருநாளும் தோனியாக முடியாது. தோனியைப் போல அவர் சிக்ஸர் அடிக்கிறார் என்பதற்காக மக்கள் அவரை தோனியுடன் ஒப்பிடத்தொடங்கியுள்ளனர். பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டிலும் அவர் தன்னை நிறைய மேம்படுத்த வேண்டியுள்ளது" எனக் கூறினார்.

 

 

Next Story

தடைகளைத் தாண்டும் ரிஷப் பண்ட்; ரசிகர்கள் மகிழ்ச்சி!

Published on 14/06/2023 | Edited on 14/06/2023

 

cricketer rishabh pant instagram viral video after car incident treatment 

 

உத்தரகாண்ட் மாநிலத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நிகழ்ந்த கார் விபத்தில் சிக்கிய பிரபல கிரிக்கெட் வீரர் ரிஷப் பண்ட் படுகாயம் அடைந்தார். அதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பல்வேறு அறுவை சிகிச்சைகள் மேற்கொண்டு தற்போது உடல்நிலை தேறிவரும் நிலையில் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.

 

இந்நிலையில் ரிஷப் பண்ட் வெளியிட்டுள்ள வீடியோவில், முதலில் மாடிப்படிக்கட்டில் ஏறும்போது கடும் சிரமத்திற்கு இடையில் படிக்கட்டின் கைப்பிடி உதவியுடன் ரிஷப் பண்ட் நடந்து வருகிறார். அதனைத் தொடர்ந்து தற்போது சற்று சகஜமாக நடந்து வருகிறார். அந்த வீடியோவில், 'மோசமாக இல்லை. சாதாரண விஷயங்கள் கூட சில நேரங்களில் கடினமாக இருக்கும்' என்று குறிப்பிட்டுள்ளார்.

 

இதையடுத்து அவரது ரசிகர்கள் ரிஷப் முழுவதும் குணமடையவும், விரைவில் கிரிக்கெட் மைதானத்திற்கு வாருங்கள் எனவும் கமெண்ட் செய்து உற்சாகம் அளித்து வருகிறார்கள். ரிஷப் பண்ட் வெளியிட்டுள்ள வீடியோ ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

 

 

Next Story

“உணர்ச்சிவசப்படாமல் இருங்கள்” - கம்பீருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுரை

Published on 18/05/2023 | Edited on 18/05/2023

 

Delhi High Court advises gautam Gambhir

 

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும் பாஜக எம்.பியுமான கௌதம் கம்பீருக்கு டெல்லி உயர்நீதிமன்றம் அறிவுரை கூறியுள்ளது. 

 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரரும் பாஜக எம்.பியுமான கௌதம் கம்பீர் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். பிரபல இந்தி பத்திரிகை ஒன்று சமீபத்தில் கௌதம் கம்பீர் ஐபிஎல் போட்டிகளில்தான் பிஸியாக இருக்கிறார் என்று கட்டுரை வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் தன்னுடைய செயல்திறன் குறித்து தவறான கட்டுரையை வெளியிட்டுள்ளது என்று கூறி சம்பந்தப்பட்ட பத்திரிகை மீது 2 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்ட ஈடு வழக்கு தொடர்ந்திருந்தார். 

 

இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம், “நீங்கள் மக்களால் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர். மக்கள் சேவையில் இருப்பவர். பொதுவாழ்வில் இருப்பவர்கள் விமர்சனங்களுக்கு எளிதில் உணர்ச்சிவசப்படாமல் சகிப்புத் தன்மையுடன் இருக்க வேண்டும்” என்று கருத்து தெரிவித்து வழக்கின் விசாரணையை அக்டோபர் மாதத்திற்கு தள்ளிவைத்து உத்தரவிட்டுள்ளது.