Advertisment

"தோனியின் இந்த ஒரு சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது..." கவுதம் காம்பீர் உறுதி!

Dhoni - gambhir

Advertisment

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சில தினங்களுக்கு முன்னால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து முழுமையாக ஓய்வு பெறுவதாக தன்னுடைய ஓய்வு அறிவிப்பை அறிவித்தார். தற்போது அவருக்கு பலரும் பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் மற்றவர்களுக்குச் சவால் விடும் வகையில் ஒரு வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.

அதில், "ஒருநாள் உலக கோப்பை, டீ20 உலக கோப்பை, சாம்பியன்ஸ் ட்ராபி என மூன்று கோப்பைகளையும் வென்ற ஒரே கேப்டன் என்ற சாதனையை இனி எந்த ஒரு இந்தியக் கேப்டனாலும் முறியடிக்க முடியாது. இது என்றும் நிலைத்திருக்கும். ரோஹித் ஷர்மாவின் இரட்டை சதம் எனும் சாதனை, நாளை வேறொரு பேட்ஸ்மேனால் முறியடிக்கப்படலாம். அதிக சதம் என்ற சாதனை கூட முறியடிக்கப்படலாம். ஆனால் மூன்று கோப்பைகளை வென்ற இந்தியக் கேப்டன் எனும் சாதனையை யாராலும் நெருங்க முடியாது" எனக் கூறியுள்ளார்.

Dhoni
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe