ADVERTISEMENT

விராட் கோலிக்கு நோட்டீஸ் அனுப்ப விரும்பிய கங்குலி

12:30 PM Jan 21, 2022 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்னதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஒருநாள் கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் கோலி நீக்கப்பட்டு, ரோகித் சர்மா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுதொடர்பாக சர்ச்சைகள் எழுந்த நிலையில், கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் நீக்கப்பட்டது குறித்து பதிலளித்த கங்குலி, "இருபது ஓவர் அணியின் கேப்டன் பதவியிலிருந்து விலக வேண்டாம் என்று பிசிசிஐ விராட்டை கேட்டுக்கொண்டது. ஆனால் அவர் ஒப்புக்கொள்ளவில்லை" எனத் தெரிவித்தார்.

மேலும் கங்குலி, "ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் தனித்தனி கேப்டன்கள் இருப்பது சரியானதல்ல எனத் தேர்வாளர்கள் நினைத்தார்கள். எனவே, விராட் டெஸ்ட் கேப்டனாகத் தொடர்வார் என்றும் ரோகித் ஒருநாள் மற்றும் இருபது ஓவர் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்பார் என்றும் முடிவு செய்யப்பட்டது. இந்த முடிவு குறித்து (பிசிசிஐயின்) தலைவர் என்ற முறையில் நான் விராட் கோலியிடம் தனிப்பட்ட முறையில் பேசினேன். தேர்வுக்குழு தலைவரும் அவருடன் பேசியுள்ளார்" எனக் கூறியிருந்தார்.

ஆனால் தென்னாப்பிரிக்கா செல்வதற்கு முன்னர் பேட்டியளித்த விராட் கோலி, டி20 கேப்டன் பொறுப்பிலிருந்து தன்னை விலக வேண்டாம் என யாரும் கூறவில்லை எனத் தெரிவித்தார். மேலும், "டெஸ்ட் அணித் தேர்வுக்கு ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னர் என்னை தொடர்புகொண்டனர். தலைமைத் தேர்வாளர் என்னுடன் டெஸ்ட் அணி குறித்து விவாதித்தார். அழைப்பு முடிவடைவதற்கு முன்பு, நான் இனி ஒருநாள் அணியின் கேப்டனாக இருக்கப்போவதில்லை என ஐந்து தேர்வாளர்களும் முடிவு செய்துள்ளதாக என்னிடம் கூறப்பட்டது. அதற்கு முன்பாக இதுகுறித்து எதுவும் கூறப்படவில்லை. டி20 கேப்டன் பதவியைவிட்டு விலகும் முன்னர் பிசிசிஐயிடம் அதுகுறித்து தெரிவித்தேன். எனது கருத்தை அவர்களிடம் சொன்னேன். அதைப் பிசிசிஐ ஏற்றுக்கொண்டது. இது ஒரு முற்போக்கான நடவடிக்கை என்று கூறி அதனை பிசிசிஐ வரவேற்றது" என்றார்.

கேப்டன் பொறுப்பிலிருந்து விராட் நீக்கப்பட்டது தொடர்பாக, கங்குலி கூறியவற்றிலிருந்து முரண்பட்ட ஒன்றை விராட் கோலி கூறியது ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தநிலையில், விராட் கோலியின் பத்திரிகையாளர் சந்திப்புக்குப் பின்னர், அந்த சந்திப்பில் அவர் தெரிவித்தவை தொடர்பாக விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப கங்குலி முடிவு செய்ததாகவும், ஆனால் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா இதில் தலையீட்டு விராட் கோலிக்கு நோட்டீஸ் அனுப்புவதைத் தடுத்து நிறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடர் முடிவடைந்தவுடன், விராட் கோலி இந்திய டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT