dada

இந்தியகிரிக்கெட்அணியின்முன்னாள் கேப்டனும், இந்தியகிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ்கங்குலி, இம்மாதத் தொடக்கத்தில் மாரடைப்பு காரணமாககொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கங்குலியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சை செய்யப்பட்டது.

Advertisment

இதனைத் தொடர்ந்து கங்குலிடிஸ்சார்ஜ் செய்யபட்டார். இந்தநிலையில் நேற்று கங்குலிநேற்று மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு அவரைபரிசோதித்தடாக்டர்கள், அவரின்உடல்நிலை சீராகஇருப்பதாகக் கூறினர்.

Advertisment

இந்தநிலையில் சவுரவ்கங்குலிக்கு இரண்டாம்முறையாகஆஞ்சியோபிளாஸ்டி செய்யப்பட்டு, இதயத்தில் இரண்டு 'ஸ்டென்ட்'டுகள் பொருத்தப்பட்டுள்ளது. பிரபல இருதய நிபுணர் தேவி ஷெட்டி முன்னிலையில், இந்தஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.