கங்குலியின் உடல்நிலை எப்படி இருக்கிறது? - மருத்துவமனை அறிக்கை! 

GANGULY

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலிக்கு நேற்று முன்தினம் கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். இதனைத்தொடர்ந்து நேற்று அவரது உடல்நிலை குறித்து அறிக்கை வெளியிட்ட உட்லண்ட்ஸ் மருத்துவமனை, கங்குலியின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்தது.

இந்தநிலையில்தற்போது உட்லண்ட்ஸ் மருத்துவமனை கங்குலி உடல்நிலை தொடர்பாக மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், கங்குலியின் உடல்நிலை தொடர்ந்து சீராக இருப்பதாகவும், நேற்று இரவு நன்றாக தூங்கியதாகவும், காலை உணவு மற்றும் மத்திய உணவை எடுத்துக்கொண்டதாகவும்கூறப்பட்டுள்ளது.

மேலும் கங்குலியின் உடல்நிலையைமருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் உட்லண்ட்ஸ் மருத்துவமனை தனது அறிக்கையில் கூறியுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe