gfxg

Advertisment

இந்திய கிரிக்கெட் வீரர்களான ஹர்டிக் பாண்டியா மற்றும் ராகுல் ஆகியோர் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பெண்களை பற்றி சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததால் சிக்கலில் மாட்டினர். இவர்களின் கருத்துக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு எழுந்தது. இந்திய அணியிலும் அவர்களது இடம் பறிபோனது. இந்நிலையில் தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த கங்குலி இதுபற்றி கூறுகையில், 'பாண்டியாவும், கே.எல்.ராகுலும் நம்மை போன்ற மனிதர்கள்தான். மனிதர்கள் என்றால் தவறு செய்வது இயல்புதான். இதை நீண்ட நாட்களுக்கு நாம் பெரிதாக்கிக்கொண்டிருக்கக் கூடாது. யார் தவறு செய்தாலும், நிச்சயம் அதற்காக வருந்துவார்கள் எனநான் நம்புகிறேன். மனம் திருந்தி கண்டிப்பாக சிறந்த மனிதர்களாக வருவார்கள். நாம் அனைவருமே உணர்வுள்ள மனிதர்கள்தான், எந்திரங்கள் அல்ல. நீங்களும் வாழ வேண்டும், அதேசமயம், அடுத்தவர்களையும் வாழவிட வேண்டும்' என கூறினார்.