ganguly

Advertisment

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரான கங்குலிக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தநிலையில், அதனை கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனை உறுதி செய்துள்ளது.

இதுதொடர்பாகஉட்லண்ட்ஸ் மருத்துவமனைவெளியிட்டுள்ள அறிக்கையில், கங்குலி நேற்று இரவு உட்லண்ட்ஸ் பல்நோக்கு மருத்துவமனையில் கரோனாதொற்றுடன் அனுதிக்கப்பட்டதகாவும், நேற்று இரவேஅவருக்குமோனோக்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும்கூறப்பட்டுள்ளது.

மேலும், தற்போது கங்குலி ஹெமோடைனோமிக்கலி ஸ்டேபிளாக இருப்பதாகவும், மருத்துவ குழு அவரது உடல்நிலையைகண்காணித்துவருவதாவும்அந்த அறிக்கையில்உட்லண்ட்ஸ் மருத்துவமனை தெரிவித்துள்ளது.ஹெமோடைனோமிக்கலி ஸ்டேபிள் என்றால் இதயத் துடிப்பு மற்றும் இரத்த ஓட்டம்சீராக உள்ளது என்று பொருள்.