ganguly

Advertisment

13-வது ஐபிஎல் தொடர் அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. தோனி தலைமையிலான சென்னை அணிக்கு ஐபிஎல்-லின் தொடக்கம் பெரும் சறுக்கலாக அமைந்துள்ளது. மூன்று போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி, ஒரு வெற்றியும், இரண்டு தோல்விகளும் கண்டுள்ளது. மேலும், தோனியின் ஆட்டம் குறித்தும், அவர் களமிறங்கும் இடம் குறித்தும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதனால், தோனி அடுத்துவரும் போட்டிகளில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகியுள்ளார். இந்நிலையில், இந்திய அணியின் மூத்த வீரரும், கிரிக்கெட் விமர்சகருமான கங்குலி தோனிக்கு ஆதரவாக கருத்துதெரிவித்துள்ளார்.

அதில் அவர், "தற்போதைய நிலையில் தோனி பழைய நிலைக்குத் திரும்புவதற்கு கொஞ்சம் காலம் எடுக்கலாம். அவர் ஒன்றரை ஆண்டுகள் கிரிக்கெட் விளையாடாமல் இருக்கிறார். எவ்வளவு திறமையான வீரராக இருந்தாலும், உடனே ஃபார்மிற்கு திரும்புதல் என்பது சாதாரண விஷயமில்லை" எனக் கூறினார்.

Advertisment

இந்திய அணியின் மூத்த வீரரான கவுதம் காம்பீரும், இங்கிலாந்து அணியின் மூத்த வீரருமான கெவின் பீட்டர்சனும் தோனியின் ஆட்டத்தை முன்னர் கடுமையாக விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.