dada

Advertisment

இந்தியகிரிக்கெட்அணியின்முன்னாள் கேப்டனும், இந்தியகிரிக்கெட் வாரியத்தின் தலைவருமான சவுரவ்கங்குலி, இம்மாதத் தொடக்கத்தில் மாரடைப்பு காரணமாககொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு கங்குலியின் இதயத்தில் மூன்று அடைப்புகள் இருப்பதுகண்டுபிடிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கங்குலிக்கு ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சைசெய்யப்பட்டது.

இதனையடுத்து கங்குலி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். இந்தநிலையில் இன்று கங்குலிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்தநிலையில் கங்குலி, தனதுஇதயநிலையைபரிசோதித்துக்கொள்ள மருத்துவமனைக்கு வந்ததாகவும், அவருக்கு நெஞ்சு வலி ஏற்படவில்லை என்றும் மருத்துவமனை தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கங்குலியை பரிசோதித்தஅப்பலோமருத்துவமனை,சவுரவ் கங்குலி தனது இருதய நிலையைப் பரிசோதித்துக்கொள்ள வந்துள்ளார்.அவரதுஇதயம் தொடர்பானமுக்கியஅளவுகூறுகள் நிலையாக இருக்கின்றன.