இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான கங்குலிக்கு கரோனாபாதிப்பு உறுதியான நிலையில் அவர் கொல்கத்தாவில் உள்ள உட்லண்ட்ஸ் மருத்துவமனையில் கடந்த27 ஆம் தேதி அனுமதிக்கபட்டார். அங்கு அவருக்குமோனோக்ளோனல் ஆன்டிபாடி காக்டெய்ல் சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்தநிலையில்தற்போது கங்குலி கரோனாவில் இருந்து குணமாகியுள்ளார். அதனைத்தொடர்ந்து அவர் தற்போது வீடு திரும்பியுள்ளார். கரோனாவிலிருந்து குணமடைந்திருந்தாலும் அடுத்த 14 நாட்களுக்கு கங்குலி, தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக்கொள்ளவுள்ளார்.
கங்குலியின் மாதிரி சோதனை செய்யப்பட்டதில், அவருக்கு ஒமிக்ரான்பாதிப்பு ஏற்படவில்லை என கண்டறியப்பட்டதாகதகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.